வரும் 14ம் தேதி நடக்கிறது தொழிற்பழகுநர் சேர்க்கை
கோவை : தேசிய தொழிற் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வரும் 14ல் நடக்கிறது.இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள, தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று,300-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் பங்கேற்று தேர்வு பெற்றால், தொழிற் பழகுநர் பயிற்சி அளித்து, மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்றவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.விபரங்களுக்கு, 'உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம், கோவை' என்ற முகவரியிலும், 95665 31310, 94864 47178 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.