உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.84,560 கோடி மதிப்பு ராணுவ தளவாடம் வாங்க ஒப்புதல்

ரூ.84,560 கோடி மதிப்பு ராணுவ தளவாடம் வாங்க ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ராணுவத்துக்கு தேவையான, ரூ.84,560 கோடி மதிப்புள்ள பல்வேறு தளவாட பொருட்களை வாங்க ராணுவ கொள்முதல் கவுன்சில் அனுமதியளித்துள்ளது. நம் நாட்டு ராணுவத்தை மேலும் பலப்படுத்த அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தளவாடங்கள் வாங்கப்படுகின்றன. அதேசமயம், உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவிலேயே பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்க, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இயங்கும் ராணுவ கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதல் அவசியம். இதன்படி, நம் நாட்டு ராணுவத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் 84,560 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ராணுவ தளவாடங்களை வாங்க ராணுவ கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

A1Suresh
பிப் 17, 2024 13:04

இது போன்ற பணத்தைத்தான் காலிஸ்தான் போலி விவசாயிகள்(மண்டி ஏஜென்டுகள்-வியாபாரிகள்) மாதம் பத்தாயிரம் பென்ஷன், குறைந்தபட்ச ஆதாரவிலை, கடன் தள்ளுபடி என்றெல்லாம் கோரிக்கை வைக்கின்றனர். அவற்றையெல்லாம் பரிசீலித்தால் பாரதம் ஒரு வெனிசூலா, பாகிஸ்தான், இலங்கை போல திவாலாகும். சீனாவை எதிர்க்கமுடியாது. எந்த ஒரு உள்கட்டமைப்பு வசதியும் செய்யமுடியாது. கொரோனாவிற்கு தடுப்பூசி, உலகில் பொருளாதாரத்தில் மூன்றாமிடம் என்ற எந்த சாதனையும் செய்ய இயலாது.


sahayadhas
பிப் 17, 2024 11:34

அனைத்து விஞ்ஞான உதவிகளுக்கு அமெரிக்கா / ரஷ்யா , France கு நன்றி.


Ramesh Sargam
பிப் 17, 2024 06:22

இதற்கெல்லாம் பணம் இருக்கிறது. எங்களுக்கு கொடுக்க பணம் இல்லை, என்று கூறுவார்கள்? வேறு யார், மமதா, ராகுல் காந்தி, ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், போன்றவர்கள்தான். இவர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற ஒரு 'தளம்' உருவாக்கவேண்டும் மத்திய அரசு.


VSaminathan
பிப் 17, 2024 06:07

One happier moment to affirm SriRajnath Singh being the Defence Minister since his inception No Pointing Finger Had raised in his ex-officio n now in that position.Why?Patriotism n SelfDiscipline which in turn averts all unnecessary passion n amassig wealth,truely this 9 years had been a Golden Era after Independence,Jai Bharath Matha n Bharatha Janatha Party.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை