உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறனாய்வு தேர்வு முடிவு; கோவையில் 40 பேர் தேர்ச்சி

திறனாய்வு தேர்வு முடிவு; கோவையில் 40 பேர் தேர்ச்சி

கோவை; தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் கோவையில், 40 பேர் தேர்ச்சி பெற்றுள்னர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனை கண்டறிந்து, அவர்களை உயர் கல்வியில் ஊக்குவிக்கும் விதமாக, தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.இந்தாண்டுக்கான தேர்வு கடந்த ஜன., 25ம் தேதி நடந்தது. இதில், மாணவ, மாணவியர் தலா, 500 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இளநிலை படிப்பு வரை மாதம் ரூ.1,000 வீதம், 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 2,000க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், கோவையில், 21 மாணவர்கள், 19 மாணவியர் என, 40 பேர் தேர்ச்சி அடைந்து உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி