உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதவளைவு முழுமையாக சரிசெய்யலாம்

பாதவளைவு முழுமையாக சரிசெய்யலாம்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கு பாதவளைவு சரிசெய்ய, சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவில், ஒவ்வொரு வியாழன் அன்றும், பாதவளைவு குறைபாடு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளின் கால்கள் வளைந்து காணப்பட்டால், நாட்களை தள்ளிப்போடாமல் டாக்டர்களை அணுகவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எலும்பு முறிவு மற்றும் சிகிச்சை பிரிவு இயக்குனர் வெற்றிவேல் செழியன் கூறுகையில், ''குழந்தைகளுக்கான பிறவி குறைபாடுகளில் பாதவளைவு என்பது சற்று அதிகம் காணப்படுகிறது. இப்பிரச்னையை முழுமையாக குணப்படுத்த இயலும். சில பெற்றோர், வளர்ந்தால் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருக்கின்றனர். பாதவளைவு இருந்தால் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும். குறைந்தபட்சம், 3 முதல் ஆறு மாதங்கள் தொடர் சிகிச்சை அளித்தால் சரியாக்கிவிட முடியும். அரசு மருத்துவமனையில், வியாழன்தோறும் இக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு நேரம் ஒதுக்கி சிகிச்சை அளித்து வருகிறோம். இக்குறைபாடுக்கு காரணமான மரபணு கண்டறிந்து, தீர்வு காணும் நோக்கில், இரண்டாம் கட்ட ஆராய்ச்சிகளையும் நடத்தி வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை