உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டோரத்தில் மின்கம்பங்கள் முறையாக பயன்படுத்தப்படுமா?

ரோட்டோரத்தில் மின்கம்பங்கள் முறையாக பயன்படுத்தப்படுமா?

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி பகுதியில், ரோட்டோரம் புதிய மின்கம்பங்கள் குப்பை போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, ஆழியாறு செல்லும் வழியில், அங்கலக்குறிச்சி அருகே ரோட்டோர பள்ளத்தில் ஏராளமான புதிய மின்கம்பங்கள் குப்பை போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் செடி முளைத்து புதர் போல காட்சியளிக்கிறது. மேலும், இப்பகுதியில் ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பை கிடக்கிறது. சுற்று வட்டார பகுதியில், பல இடங்களில் சிதிலமடைந்த மின்கம்பங்கள் உள்ளது. அவற்றைக் கண்டறிந்து முறையாக மாற்றாமல் இப்படி புதிய மின்கம்பங்கள் குப்பையில் கிடக்கிறது. மேலும், புதிய கம்பங்களை மின் துறை அலுவலகத்தில் வைக்காமல், இது போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ரோட்டோரம் கிடக்கும் மின் கம்பங்களை, மின் துறை அதிகாரிகள் முறையாக உபயோகப்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ