உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பத்திரமா?

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பத்திரமா?

கோவை: தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி, லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் கிராந்திகுமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் நேரில் சென்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஆய்வு மேற்கொண்டார்.கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் செந்தில்வடிவு, தேர்தல் பிரிவு தாசில்தார் தணிகை வேல் உள்ளிட்ட அரசுப்பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ