உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டு சங்கங்களுக்கு அங்கீகாரம் இருக்கா? விசாரித்து சேர்க்க பெற்றோருக்கு அறிவுரை

விளையாட்டு சங்கங்களுக்கு அங்கீகாரம் இருக்கா? விசாரித்து சேர்க்க பெற்றோருக்கு அறிவுரை

பொள்ளாச்சி; அங்கீகரிக்கப்படாத விளையாட்டு சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் கிடையாது, என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம் பெற்ற மாநில விளையாட்டு சங்கங்கள், மாநில, தேசிய அளவிலான போட்டி நடத்த தகுதியானவர்கள் பட்டியலை வெளியிடுகிறது.அவர்கள், வீரர்களை தயார்படுத்தி தேசிய போட்டிகளில் தமிழக அணியை பங்கேற்க செய்வர். அதற்கான மானிய தொகை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.அதன்படி, தடகளம், ஹாக்கி, கூடைப்பந்து, ேஹண்ட்பால், கபடி, ஜூடோ, கால்பந்து, கோ- -கோ, சைக்கிளிங், டேபிள் டென்னிஸ், கேரம், சிலம்பம், த்ரோபால், பேட்மிட்டன், ரோலர் ஸ்கேட்டிங் உள்ளிட்ட, 37 போட்டிகளை நடத்த அசோசியேஷன்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தாலுகாவில், விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகளின் கனவை நனவாக்கும் வகையில் பயிற்சி மற்றும் போட்டிக்காக அதிக பணத்தை செலவிடுகின்றனர்.அதேநேரம், பெற்றோர் சிலர், அங்கீகரிக்கப்படாத விளையாட்டு சங்கங்கள் வாயிலாக குழந்தைகளுக்கு பயிற்சி பெற முற்படுவதால், குழப்பமும், சந்தேகமும் ஏற்படுகிறது.இது குறித்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு, எந்தவித அங்கீகாரம் கிடைக்காது. பெற்றோர் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அறிந்து, அங்கு குழந்தைகளை பயிற்சிக்கு அழைத்து செல்ல வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை