மேலும் செய்திகள்
அர்ஜூன் சம்பத் மகன் ஜாமின் கேட்டு மீண்டும் மனு
21-Nov-2024
அர்ஜுன் சம்பத் மகனிடம் விசாரிக்க அனுமதி
22-Nov-2024
கோவை; ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனுக்கு நீதிமன்ற காவல், டிச., 13 வரை நீட்டிக்கப்பட்டது.கோவை ஈஷா யோகா மையம் குறித்து,'நக்கீரன்' இதழில் அவதுாறு பரப்புவதாக கூறி, அவரை கண்டித்து ஹிந்து மக்கள் கட்சி சார்பில், கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜி, நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மிரட்டல் விடுத்து பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.காவல் நீட்டிப்புக்காக, கோவை ஜே.எம்:3, கோர்ட்டில், வீடியோகான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ஓம்கார் பாலாஜி நீதிமன்ற காவலை, டிச., 13 வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
21-Nov-2024
22-Nov-2024