உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆரோக்கியமாதா கெபி ஆசீர்வாத விழா

ஆரோக்கியமாதா கெபி ஆசீர்வாத விழா

வால்பாறை; வால்பாறை, மாணிக்கா எஸ்டேட்டில், மாதா சந்திப்பில் ஆரோக்கியமாதா கெபி, ஆசீர்வாத விழா நடந்தது.வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட் சந்திப்பில், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அன்னை ஆரோக்கியமாதா கெபி ஆலயம், தற்போது புதுப்பொழிவுடன் அமைக்கப்பட்டது.இதன் திறப்பு விழா, புனித லுாக்கா ஆலய பங்கு தந்தை ஜிஜோ தலைமையில் நடந்தது. விழாவில், கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் போல்ஆலப்பாட் மாதா ஆலயத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, திருப்பலி, சிறப்பு ஜெபவழிபாடு நடைபெற்றது. விழாவில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை