உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

கோவை; தி.மு.க., மாஜி அமைச்சர் சொத்துகுவிப்பு வழக்கில், அதிகாரி ஆஜராகாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.கோவை, சிங்கா நால்லுாரில் வசித்து வருபவர் பொங்கலுார் பழனிச்சாமி. தி.மு.க., முன்னாள் அமைச்சரான இவர், 2006- 2011ல் பதவியில் இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்சம் ரூபாய்க்கு சொத்து குவித்த வழக்கு, கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.வழக்கின் புலன் விசாரணை அதிகாரி சண்முகபிரியா, கோர்ட்டில் ஆஜராகி சாட்சியளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நேற்று கோர்ட்டில் ஆஜராகாததால் விசாரணை பிப்., 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி