| ADDED : டிச 27, 2025 05:06 AM
கோவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தும் அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிட தேர்வு, இன்று (டிச.27) நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அக். 16ல் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, இன்று நடைபெறும் இத்தேர்வில் கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 தேர்வு மையங்களில் மொத்தம் 4,745 பேர் பங்கேற்கின்றனர். இதில், 80 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு உதவ 30 'ஸ்கிரைப்' நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு, ஓ.எம்.ஆர் முறையில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்படுகிறது.