/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கவனத்துக்கு... சர்வதேச கிரிக்கெட் மைதானம்: வெளியிடப்படாத அரசாணை
முதல்வர் கவனத்துக்கு... சர்வதேச கிரிக்கெட் மைதானம்: வெளியிடப்படாத அரசாணை
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என தி.மு.க., தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பின், எம்.பி., பதவியை கைப்பற்றியது. உடனடியாக இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. ஒண்டிப்புதுாரில் தற்போது திறந்தவெளி சிறை மைதானமாக உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு, வகை மாற்றம் செய்யப்பட்டு விட்டது. ஸ்டேடியம் கட்டுவதற்கான வரைபடம் தயாராக டெண்டர் கோரப்பட்டது. 'ஸ்டேடியம் மாடல்' இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேலும், இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணையும் வெளியிடப்படவில்லை. கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு அடிக்கல் நடும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான நிதியையும் ஒதுக்கி, அரசாணை வெளியிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.