மின்நுகர்வோர் கவனத்துக்கு!
பொள்ளாச்சி : ஆனைமலை, மாசாணியம்மன் கோவில் பகிர்மான பகுதியில் உள்ள மின் நுகர்வோர், ஜூலை மாத மின் கட்டண தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனைமலை பிரிவு மின் வாரியம், மாசாணியம்மன் கோவில் பகிர்மான பகுதியில் உள்ள மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களால், செப்., மாத கணக்கீடு செய்ய இயலவில்லை.மேற்படி பகிர்மான மின் நுகர்வோர்கள், கடந்த ஜூலை மாதத்தில் செலுத்திய மின் கட்டணத் தொகையையே, செப்., மாதத்திற்கும் செலுத்தலாம். குறிப்பாக, அறிவிப்பு பெறப்பட்ட, 20 தினங்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த தகவலை, அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.