மேலும் செய்திகள்
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
19-Nov-2024
பொள்ளாச்சி : 'பெரியபோது மற்றும் மாரப்பகவுண்டன்புதுார் மின் இணைப்புகளுக்கு மின் கணக்கீடு செய்யவில்லை. கடந்த அக்., மாதம் செலுத்திய மின் கட்டணத்தை செலுத்தலாம்,' என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தேவானந்த் அறிக்கை: அங்கலகுறிச்சி மின் கோட்டம், ஆனைமலை பிரிவுக்கு உட்பட்ட பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார் பகுதிகளில் உள்ள மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் மின் கணக்கீடு செய்யவில்லை.எனவே, கணக்கீடு செய்யப்படாத பகிர்மான மின்நுகர்வோர்கள் அக்., மாதத்தில் செலுத்திய மின்கட்டண தொகையையே செலுத்தலாம். இந்த அறிவிப்பு பெறப்பட்ட, 20 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
19-Nov-2024