உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிப்பிட பராமரிப்பில் வேண்டும் கவனம்!  அப்படியே விட்டால் கைவிடும் ஆரோக்கியம்

கழிப்பிட பராமரிப்பில் வேண்டும் கவனம்!  அப்படியே விட்டால் கைவிடும் ஆரோக்கியம்

விழுவதற்கு தயார்

சுல்தான்பேட்டை சந்திராபுரத்தில் இருந்து, வேலப்ப நாயக்கன்பாளையம் செல்லும் சாலையில், எலும்புக்கூடாய் நின்று பயமுறுத்தி வருகிறது மின்கம்பம். எப்போது விழுமோ என்ற, அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது.- -லட்சுமணசாமி, சுல்தான்பேட்டை.

மாதங்கள் ஆச்சு

கோவை மாநகராட்சி 38வது வார்டு தொண்டாமுத்தூர் ரோடு குருசாமி நகர் சந்திப்பில், மின்கம்பத்தில் மின் விளக்குகள் எரிந்து, பல மாதங்கள் ஆகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- சண்முகம், பொம்மனம்பாளையம்.

தேங்கும் மழைநீர்

சோமையம்பாளையம் ஊராட்சி ஆர்.ஆர்.நெஸ்ட் நுழைவுப் பகுதியில், மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி, கடந்த 3 மாதங்களாக கொசு உற்பத்தியாகி பல வித பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.- -சாந்தினி, கோவை.

தெருநாய்கள் தொல்லை

வடவள்ளி புது தில்லை நகரில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். வாகனத்தில் செல்லும் போது துரத்தி வருகின்றன.--கிருஷ்ணன், வடவள்ளி.

ஒரு வருஷமாக

வார்டு எண் 83ல், திருச்சி சாலை வி.சி.கே., லே-அவுட்டில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை வீட்டுக்கு முன், கடந்த ஒரு வருடமாக சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. சுத்தம் செய்ய யாரும் வரவில்லை. சுகாதார சீர்கேடால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.-- உமா மகேஸ்வரி, வி.சி.கே., லே-அவுட்.

பராமரிப்பு இல்லை

மருதமலையில் சமீபத்தில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே, சுமார் ரூ.80 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது பராமரிப்பு என்பது இல்லை. ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால், ஏராளமானவர்கள் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் வராததால் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கார்த்திக், கோவை.

இரவில் பயம்

வடவள்ளி -வேம்பு அவென்யூ சிறுவாணி சாலையில், தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இரவு நேரங்களில் செல்ல மிகவும் பயமாக இருக்கிறது. ஏதாவது குற்றச் செயல்கள் நடக்கும் முன், தெருவிளக்குகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.-- சூரி, வடவள்ளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை