உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டோ திருடிய வழக்கு: 3 பேர் கைது

ஆட்டோ திருடிய வழக்கு: 3 பேர் கைது

பாலக்காடு:பாலக்காடு அருகே, பள்ளி முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு யாக்கரை பகுதியை சேர்ந்தவர், பள்ளி குழந்தைகள் அழைத்து வர ஆட்டோ ஓட்டுகிறார். இருவாரம் முன் தனது ஆட்டோவை சந்திரநகர் அருகே உள்ள தனியார் பள்ளி முன் நிறுத்தியுள்ளார்.அப்போது, அப்பகுதியில் இருந்த மர்ம கும்பல் ஆட்டோவை திருடி சென்றுள்ளனர். பள்ளி வளாகத்தில் இருந்து குழந்தைகளுடன் திரும்பி வந்த ஆட்டோ உரிமையாளர், ஆட்டோ காணாவில்லை என, புதுச்சேரி (கசபா) போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், ஆட்டோ கோவை நோக்கி சென்றது தெரிய வந்தது. அதன்பின், போலீசார் மதுக்கரை அருகே வைத்து ஆட்டோவை பிடித்தனர். ஆனால், திருட்டு கும்பல் தப்பி ஓடி விட்டது.இதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையில் சிறப்பு படை அமைத்து விசாரணை நடந்தது. ஆட்டோவை திருடியது கேரள மாநிலம் பத்தனம்திட்டை மலையாலப்புழாவை சேர்ந்த சுனில் ராஜேஷ், 30, கோவை கல்லுப்பட்டி கோவில் நகரைச் சேர்ந்த கிரி, 20, தேனி ஆண்டிப்பட்டி குமணந்தொலுவை சேர்ந்த பாலகிருஷ்ணன், 33, ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து, இவர்களை பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து தமிழக போலீசாரின் உதவியுடன் கோவையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் ராஜீவ் கூறுகையில், 'பள்ளி முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை கண்காணித்து திருடியுள்ளனர். கைது செய்யப்பட்ட சுனில் ராஜேஷ் என்பவர் தமிழகத்திலும் கேரளாவிலும் ஏராளமான வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி. கிரி, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீதும் பல திருட்டு வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ