உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குன்னங்காட்டுப்பதி பால் சொசைட்டிக்கு விருது

குன்னங்காட்டுப்பதி பால் சொசைட்டிக்கு விருது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குன்னங்காட்டுப்பதி பால் சொசைட்டிக்கு, 'வர்கீஸ் கொரியன்' விருது வழங்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம், இடுக்கி தொடுபுழாவில் நடந்த விருது வழங்கும் விழாவில், குன்னங்காட்டுப்பதி பால் சொசைட்டிக்கு, 2024 - 25ம் ஆண்டுக்கான உயர்ந்த விருதான 'வர்கீஸ் கொரியன்' விருது, கேரளா பால்வளத்துறை வழங்கி கவுரவித்தது. இந்த விருதை பால்வளத்துறை அமைச்சர் சிஞ்சுராணி வழங்கினார்.சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கூறுகையில், ''கடந்த, 2022 - 23, 2023 - 24ம் ஆண்டுக்கான அதிக பால் வழங்கிய சங்கத்துக்கான விருதும், 2023 - 24ம் ஆண்டில் அதிக மில்மா பொருட்கள் விற்பனை செய்தற்காக மாவட்ட விருதும் வழங்கப்பட்டது.இந்த சங்கம், 1993ம் ஆண்டு ஏழு விவசாயிகள் வாயிலாக, 38 லிட்டர் பால் கொள்முதலுடன் துவங்கப்பட்டது. தற்போது, 25,550 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் கணக்கு அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சங்கத்தின் வாயிலாக பொங்கலுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. இந்த விருது, விவசாயிகள் கடின உழைப்பால் கிடைத்தது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை