ரத்தினம் குழுமங்களின் தலைவருக்கு விருது
கோவை: ஐ.சி.டி., அகாடமி சார்பில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில், ரத்தினம் கல்விக்குழுமங்களின், தலைவர் மதன் செந்திலுக்கு, 'அடுத்த தலைமுறை கல்வி பயிற்சியாளர் விருது' வழங்கப்பட்டது. இவ்விருது, தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் வழங்கப்பட்டது. கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துதல், ஏ.ஐ.சி., ரைஸ் வாயிலாக மாணவர்களுக்கு 'ஸ்டார்ட் அப்' வாய்ப்புகளை ஏற்படுத்துதல், சர்வதேச பல்கலைகளுடன் ஒப்பந்தம் உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.