உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.ஆர்., நிர்வாகிக்கு வழங்கப்பட்டது விருது

எஸ்.என்.ஆர்., நிர்வாகிக்கு வழங்கப்பட்டது விருது

கோவை; தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் ஆதரவுடன் ஐ.சி.டி., அகாடமியின் பிரிட்ஜ் 2025 மாநாட்டின், 63வது மாநாடு நடந்தது.இதில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தருக்கு, கல்வி மாற்றத்திற்கான முன்னோடி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை, தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் நிகழ்த்திய முன்னோடியான அவரின் பங்களிப்பு, மேலும் மாணவர்களையும் கல்வி நிறுவனங்களையும் புதுமை, தொழில்நுட்பம் மற்றும் தரத்துடன் சிறப்படைய செயல்பட்டதற்காக, இந்த விருது வழங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலர் பிரேஜேந்திர நவநித், கே.ஆர்.இ.ஏ., பல்கலை துணைவேந்தர் மற்றும் ஆட்சிக்குழு தலைவர் லட்சுமி நாராயணன், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மேலாண்மை இயக்குனர் சங்கர், ஐ.சி.டி., தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை