உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாற்றாண்டு கண்ட 58 பள்ளிகளுக்கு விருது

நுாற்றாண்டு கண்ட 58 பள்ளிகளுக்கு விருது

கோவை; கோவை மாவட்டத்தில் நுாற்றாண்டு கண்டு, கல்வி பணியில் சிறந்து பங்காற்றி வரும் 58 பள்ளிகளுக்கு, கலெக்டர் பவன்குமார் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கல்வி துறையில் நீண்ட காலம் சேவையாற்றி வரும் பள்ளிகளை அங்கீகரிக்கும் வகையில், இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனைமலை, அன்னுார், கோவை நகரம், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பி.என்.பாளையம், பேரூர், பொள்ளாச்சி (வடக்கு) மற்றும் எஸ்.எஸ்.குளம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 37 ஆரம்பப் பள்ளிகள், 17 நடுநிலைப் பள்ளிகள், 3 உயர்நிலைப் பள்ளிகள், மற்றும் 1 மேல்நிலைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்பள்ளிகளின் பங்களிப்பை பாராட்டி, நுாற்றாண்டு கால கல்வி சேவையை சிறப்பிக்கும் விதமாக இந்த கவுரவம் வழங்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறுகையில், ''கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில், நுாற்றாண்டு விழாவை கொண்டாடிய பள்ளிகளுக்கான இந்த அங்கீகாரம், பள்ளிகளை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல உந்துதலாக அமையும். ஆசிரியர்களும் மிகுந்த ஊக்கத்துடன் பள்ளி மேம்பாட்டு பணிகளில் ஈடுபட, சிறந்த வாய்ப்பாக அமையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை