உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உறவுகள் அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கல்

உறவுகள் அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கல்

கருமத்தம்பட்டி : கணியூர் ஊராட்சியில் செயல்படும் உறவுகள் அறக்கட்டளை சார்பில், 'உறவுகள் விருது -2025' வழங்கும் விழா கணியூரில் நடந்தது. கவுசிகா நீர் கரங்கள் மூலம் நீர் நிலை மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வரும் வெற்றி வேல், தண்டுவடம் பாதிக்கப் பட்டோருக்காக, அனுகிரஹா சேவை மற்றும் மறுவாழ்வு மையம் நடத்தி வரும் ரவிச்சந்திரன், சேவா பாரதி மூலம் ரத்த தானம் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும், சிவக்குமார், மரம் காவலர் பாலுசாமி, தாய்பால் கொடையாளர் சிந்து மோனிகா ஆகியோரின் சேவைகளை பாராட்டி, உறவுகள் விருது வழங்கப்பட்டன.அரசு துணை செயலாளர் சதாசிவம் விருதுகள் வழங்கி பேசினார். 'குடும்பம் ஒரு கோவில்' எனும் தலைப்பில் தமிழருவி மணியன் பேசினார். கணியூர் ஊராட்சி முன்னாள் தலைவர்கள் நடராஜ், வேலுசாமி, பரமசிவம், நடராஜ், சிவக்குமார் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை