உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை பொருள் ஒழிப்பு பள்ளியில் விழிப்புணர்வு

போதை பொருள் ஒழிப்பு பள்ளியில் விழிப்புணர்வு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று போதை பொருள் ஒழிப்பு மற்றும் புகையிலை பாதிப்பு குறித்து, மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராதிகா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி சுகாதார துறை அதிகாரி சரண்யா, பொள்ளாச்சி தாசில்தார் சிவக்குமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மாணவர்களுக்கு போதை வஸ்துக்கள் மற்றும் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ