உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரையாடுகளை காக்க விழிப்புணர்வு பிரசாரம்

வரையாடுகளை காக்க விழிப்புணர்வு பிரசாரம்

கோவை; வனத்துறை சார்பில், நீலகிரி வரையாடுகளைப் பாதுகாக்க, 'வரையாடு பாதுகாப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு நடக்கிறது.தமிழகத்தின் மாநில விலங்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழக்கூடிய, ஓரிட வாழ்வியான நீலகிரி வரையாடுகளைப் பாதுகாக்க, தமிழக வனத்துறை சார்பில், நீலகிரி வரையாடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில், கலைகள் வாயிலாக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 5 நாட்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. அரும்புகள் அறக்கட்டளை குழுவினர் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.வரும் 20ம் தேதி வரை, 3 நாட்களுக்கு கொங்குநாடு கல்லூரி, பெ.நா.பாளையம் ராமகிருஷ்ணா கல்லூரி, காரமடை டி.ஆர்.ஜி., பள்ளி, மேட்டுப்பாளையம் குமரன் கல்லூரி, மாவுத்தம்பதி எஸ்.ஏ.என்., கல்லூரி, போளுவாம்பட்டி, மருதமலை, ரேஸ்கோர்ஸ், அரசு கலைக்கல்லூரி பொள்ளாச்சி, பொள்ளாச்சி நகராட்சி பள்ளி, ஆனைமலை, ஆழியாறு உள்ளிட்ட இடங்களில், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 21, 22ம் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை