உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியின கிராமத்தில் விழிப்புணர்வு கூட்டம்

பழங்குடியின கிராமத்தில் விழிப்புணர்வு கூட்டம்

ஆனைமலை; ஆனைமலை சரளப்பதி, தம்பம்பதி பழங்குடியின கிராமங்களில், மது விலக்கு, மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆனைமலை அருகே, சரளப்பதியில் பழங்குடியின மக்கள் வசதிக்கும் பகுதியில், ஆனைமலை போலீஸ் சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில், எஸ்.ஐ., மைக்கேல் சகாயராஜ், மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து விளக்கினார்.வெளியூர்களில் இருந்து வரக்கூடிய நபர்களை கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும்படி நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, தெரிவித்தார்.திருட்டு குற்றங்கள், வாகன விபத்துகள் தடுப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தம்பம்பதி, கோழிபண்ணை, தேவிபட்டிணம் கிராமங்களில் மதுவிலக்கு மாவோயிஸ்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை