உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விழிப்புணர்வு ஓவிய போட்டி 

விழிப்புணர்வு ஓவிய போட்டி 

கோவை; உலக புகையிலை ஒழிப்பு தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, 'தாய்மை அறக்கட்டளை' சார்பில், விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்படுகிறது.இந்த போட்டி கோவை என்.ஜி.ராமசாமி நினைவு உயர் நிலைப்பள்ளியில் நாளை( ஜுன் 1ம் தேதி) நடைபெற உள்ளது.கோவையில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். காலை 9:00 மணிக்கு, நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு நேரடியாக வந்து பதிவு செய்து பங்கேற்கலாம். போட்டியில், புகையிலையின் தீமைகள் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் புதிய கருத்துள்ள ஓவியங்களை வரைய வேண்டும்.ஓவிய போட்டிகளின் இடையே, குழந்தை வளர்ப்பு குறித்து பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, 915915 8155.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை