பெற்றோர் தின விழாவில் விழிப்புணர்வு நாடகம்
வால்பாறை; வால்பாறை திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் தினவிழா, பள்ளிகளின் தாளாளர் சவுமியா தலைமையில் நடந்தது. விழாவுக்கு சென்லுக் சர்ச் ஆலய பங்குதந்தை ஜிஜோ, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிக் பள்ளி முதல்வர் கவிதா வரவேற்றார்.விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு, கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெகன்னாதன், வால்பாறை மாஜிஸ்திரேட் மீனாட்சி, பி.எஸ்.ஜி.,கல்லுாரி உதவி பேராசிரியர் வினோத்பிரபு ஆகியோர் பரிசு வழங்கி, பாராட்டி பேசினர்.விழாவில், மொபைல்போன் பயன்பாட்டை மாணவர்கள் தவிர்க்க வேண்டும், தீய பழக்க வழக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.