உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சூலுார்;முத்துக்கவுண்டன் புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்வியாளர் விவேகானந்தன் பழனிசாமி பேசுகையில், ''ஒவ்வொரு மனிதனையும் கற்ற கல்விதான் கரை சேர்க்கும். பள்ளியில் படிக்கும் உங்களுக்கு, படிப்பை தவிர வேறு சிந்தனை இருக்கக்கூடாது. பெற்றோர் தான் உங்களுக்கு முதல் வழிகாட்டி. அவர்கள் உங்களின் நலனில் அக்கறை கொண்டுதான் உங்களுக்கு அறிவுரைகள் வழங்குகிறார்கள். அதை தவறாமல் பின்பற்றி நடக்க வேண்டும். அடுத்ததாக ஆசிரியர்கள் தான் உங்களுக்கு வழிகாட்டி. அவர்களை உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை செதுக்கும் சிற்பிகள் ஆவர். தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள். தேர்வுகளை கண்டு பயம் கொள்ள வேண்டாம். படித்து விட்டு சமுதாயத்துக்காக பாடுபட வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை