சுற்றுப்புற துாய்மைக்கு விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சி; 'துாய்மையே சேவை' என்ற தலைப்பின் கீழ், துாய்மை பணிகளை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தபால் ஊழியர்கள் பேரணியில் ஈடுபட்டனர். பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் 'தூய்மை பாரதம்' என்னும் திட்டத்தை, மத்திய அரசு 2014-ம் ஆண்டு துவங்கியது. அவ்வகையில், பிரதமர் மோடி, 'துாய்மையே சேவை' என்ற தலைப்பின் கீழ், துாய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தலைமை தபால் அலுவலகம் துவங்கிய பேரணிக்கு, கிளை மேலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேரணியானது, பாலக்காடு ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், உடுமலை ரோடு வழியாக மீண்டும் அலுவலகம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகம் வழியாக தலைமை தபால் அலுவலகம் சென்றடைந்தது. அதன்பின், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதில், நாட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பது அவசியம். துாய்மை பேணுவதில் உறுதியாக இருப்போம். வாரத்துக்கு இரண்டு மணிநேரம், துாய்மைக்காக தன்னார்வத்துடன் பாடுபடுவோம், என, உறுதியேற்றனர்.