மேலும் செய்திகள்
ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு
18-Oct-2024
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், பயணியருக்கு யு.டி.எஸ்., செயலி குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை கால சிறப்பு ரயிலில் பயணிக்க அதிக அளவு பயணியர், ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.பயணியர் சிலர் ரயில்வே ஸ்டேஷன் வந்து டிக்கெட் பெறுவதற்குள், ரயில் சென்று விடுவதால் ரயில் சேவையை பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால், பஸ் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் டிக்கெட் எளிய முறையில் பெற, யு.டி.எஸ்., செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பாலான ரயில் பயணியருக்கு விழிப்புணர்வு இல்லாததால், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், ரயில் பயணியர் நலச்சங்கத்தின் சார்பில், யு.டி.எஸ்., செயலி குறித்த நோட்டீஸ் பயணியருக்கு வழங்கப்பட்டது.செயலி குறித்த சிறப்பம்சம், டிக்கெட் புக் செய்யும் முறை யு.டி.எஸ்., செயலி வாலெட் வாயிலாக டிக்கெட் புக் செய்வதால் கிடைக்கபெறும் 'கேஸ் பேக்' போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'யு.டி.எஸ்., செயலி குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், எளிமையான முறையில் டிக்கெட் கிடைக்க பெருவதால் பயணியர் இதை பயன்படுத்த வேண்டும்,' என்றனர்.
18-Oct-2024