உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னையில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க விழிப்புணர்வு

தென்னையில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க விழிப்புணர்வு

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி அருகே, தென்னையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து, மகளிருக்கு வேளாண் பல்கலை மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் காய்கறித்துறை பேராசிரியர்கள், நான்காம் ஆண்டு மாணவியர், ஆனைமலை பகுதியில் மகளிர் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.அதில், தென்னையில் இருந்து பெறப்படும் மதிப்புக்கூட்டு பொருட்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. தேங்காய், இளநீரை பயன்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட சாக்லேட் பார் போன்ற புதுமயைான தயாரிப்புகளை உருவாக்குவதன் வாயிலாக, கூடுதல் வருவாய் பெற முடியும் என விளக்கப்பட்டது.இந்த வகையான தயாரிப்புகள், மகளிருக்கு தொழில் முனைவோராக வளர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என விளக்கப்பட்டது. மேலும், இதன் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ