மேலும் செய்திகள்
சிலம்பம் பயிற்சி துவக்கம்
17-Sep-2025
தொண்டாமுத்தூர்: கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கோவை அறம் அறக்கட்டளை இணைந்து, மாணவர்களுக்கு அவசரகால செயல்முறை சிகிச்சை பயிற்சி வகுப்பு, கல்லூரி அரங்கத்தில் நடந்தது. இதில், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தின் நிறுவனர் சைதை துரை சாமி மற்றும் மேஜர் மதன்குமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இப்பயிற்சி வகுப்பில், சைதை து ரைசாமி பேசுகையில், உடல் நலனை பேணி பாதுகாக்க, உணவே மருந்து என்பதை கடைப்பிடிக்க வேண்டும். இந்த உண்மையை நம் மண்ணில் மட்டும்தான், நம் சித்தர்கள் விதைத்தார்கள். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்றால், அந்த செல்வத்தை பெறுவதற்கு நாவடக்கம் வேண்டும். ஆயுஷ் என்பது ஆயுர்வேதம், யோகா மற்றும் நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளாகும். பள்ளி பாடத்திட்டத்தில், ஆயுஷ் மருத்துவ முறை இல்லை. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆயுஷ் மருத்துவ முறையை பாடத்திட்டத்தில் சேர்த்தால், அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள்,'' என்றார். இப்பயிற்சி வகுப்பில், கோவை அறம் அறக்கட்டளை நிறுவனர் ரகுராமன், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
17-Sep-2025