உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அய்யப்ப பக்தர் திடீர் உயிரிழப்பு

அய்யப்ப பக்தர் திடீர் உயிரிழப்பு

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து பூச்சியூர் செல்லும் வழியில் ஸ்ரீராம் நகரில் வசித்தவர் சசிகுமார்,29; ஆக்டிங் டிரைவர். கடந்த 18ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல மாலை அணிந்தார். நேற்று (நவ.,19) நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள விநாயகர் கோயிலில் காலை, 6:00 மணிக்கு சாமி கும்பிட்டு விட்டு தனது வாகனத்தை எடுக்க சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாயிலாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !