ஐயப்ப சுவாமி திருவீதி உலா
சூலுார்; காங்கயம் பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல மகர பூஜை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தையன்ய யாத்திரா எனும் ஐயப்ப சுவாமி திருவீதி உலா சூலுாரில் நடந்தது. கலங்கல் ரோடு விநாயகர் கோவிலில் இருந்து செண்டை மேளத்துடன் திருவீதி உலா துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று, காங்கயம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நிறைவுற்றது. புலியாட்டம், மயிலாட்டம் மற்றும் சிங்காரி மேளத்துடன் நடந்த திருவீதி உலாவில், ஏராளமான பக்தர்கள் சரண கோஷத்துடன் பங்கேற்றனர்.