உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர் பாபா

ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர் பாபா

கோவை;''ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர் சாய்பாபா,'' என்று, ஓய்வு பெற்ற, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேசினார்.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'எப்போ வருவாரோ' என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, கோவை, கிக்கானி பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது. இதில், அருளாளர் ஸ்ரீ சத்ய சாய்பாபா குறித்து, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:ஒருவர் நிலைத்த புகழை அடைய வேண்டுமென்றால் ஒழுக்கம் தான் முக்கியம். நமது குழந்தைகளுக்கு, நல்ல போதனை, ஒழுக்கம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நமக்கெல்லாம் வலியுறுத்தியவர் பாபா. அன்பு என்பது தருவதிலும், மன்னிப்பதிலும் உள்ளது; ஆனால் சுயநலம் என்பது பெறுவதிலும், மறப்பதிலும் உள்ளது. தன்னலமற்ற அன்பு இருக்கிற இடத்தில் தான் சத்தியம், தர்மம் இருக்கும் என்கிறார் பாபா.எந்த மதத்தின் மீதும் வெறுப்பு கட்டாக்கூடாது என்றார். ஆன்மிகத்தில் மிகப்பெரிய புரட்சியை கொண்டு வந்தவர் சாய்பாபா. ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவம் கிடைப்பதில் முக்கிய கவனம் செலுத்தினார். சாய்பாபா கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனையில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும், இலவச கல்வி, சிகிச்சை அளித்தார். புட்டப்பர்த்தியிலுள்ள மருத்துவமனைக்கு, உலகம் முழுவதுமுள்ள மருத்துவ நிபுணர்கள் சொந்த பணத்தில் வருகை தந்து இலவச மருத்துவ சேவை ஆற்றியுள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை