உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் சிறப்பு தொழுகை

போத்தனூர்; ஜாக் சார்பில் பக்ரீத் முன்னிட்டு, நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. ஆத்துப்பாலம் அடுத்து சுண்ணாம்பு காளவாய் அருகேயுள்ள, திருமண மண்டப வளாகத்தில் காலை, 6:45 மணியளவில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகம் குறித்து விளக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். முடிவில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !