உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்து குறைவு; விலையும் சரிவால் வேதனை

வாழைத்தார் வரத்து குறைவு; விலையும் சரிவால் வேதனை

கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைவாக இருந்த நிலையில், விலையும் சரிந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும், விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள் வருகை அதிகம் உள்ளதால், வாழைத்தார்களுக்கு அதிக விலை கிடைக்கிறது.அதனால், அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை, கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். நேற்று செவ்வாழை ஒரு கிலோ - 50, நேந்திரன் --- 45, ரஸ்தாலி --- 45, பூவன் --- 35, கதளி --- 35, சாம்பிராணி --- 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.சென்ற வாரத்தை விட, செவ்வாழை கிலோ -- 30, கதளி --- 20, நேந்திரன், ரஸ்தாலி, பூவன் மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார்கள் விலை கிலோவுக்கு, 5 ரூபாய் குறைந்துள்ளது. வரத்து குறைந்துள்ள நிலையில், விலையும் சரிந்து வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.வியாபாரிகள் கூறுகையில், 'தினசரி மார்க்கெட்டில் எப்போதும் வாழைத்தார் வரத்து ஓரளவு இருக்கும். இந்த வாரம் வரத்து குறைந்த நிலையில், விலையும் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. வெயில் காலம் என்பதால் வரத்து குறைந்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை