உள்ளூர் செய்திகள்

வாழை இலை விலை உயர்வு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர். வியாபாரிகள் தலைவாழை இலையை அறுவடை செய்து, விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஒரு இலையின் விலை இரண்டிலிருந்து மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த 10 நாட்களுக்கு மேலாக, காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வாழை இலைகள் சேதமடைந்தன. இதனால் ஒரு இலை ஆறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை மாதம் வரை, வாழை இலையின் விலை உயர்வாகவே இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ