உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்து சரிவு; ஏலத்தில் விலை உயர்வு

வாழைத்தார் வரத்து சரிவு; ஏலத்தில் விலை உயர்வு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து சராசரியாக உள்ள நிலையில், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில், காய்கறிகள் மற்றும் வாழைத்தார் என அனைத்தும் உடனுக்குடன் விற்பனையாவதால், விவசாயிகள் மார்க்கெட் வாயிலாக, விளைபொருட்கள் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.மார்க்கெட்டில் நேற்று, செவ்வாழை (ஒரு கிலோ) - 60, நேந்திரன் - 35, பூவன் - 30, ரஸ்தாளி - 40, கதளி - 30, சாம்பிராணி வகை வாழைத்தார் - 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த வாரத்தை விட, தற்போது, கதளி, சாம்பிராணி வகை - 5, பூவன் - 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. செவ்வாழை கிலோவுக்கு, ஐந்து ரூபாய் விலை குறைந்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'இந்த வாரம் வாழைத்தார் வரத்து சராசரியாக இருந்தது. மேலும், உள்ளூர் வரத்து குறைந்ததால், விலையில் மாற்றம் அடைந்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ