மேலும் செய்திகள்
வாழைத்தார் விலை சரிவு; விவசாயிகள் ஏமாற்றம்
04-Sep-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில், விலையும் சரிந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று செவ்வாழை ஒரு கிலோ - 65, நேந்திரன் - 30, ரஸ்தாளி --- 40, பூவன் --- 35, கதளி --- 35, சாம்பிராணி வகை - 40 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது நேந்திரன் கிலோ - 15, கதளி --- 7, சாம்பிராணி வகை --- 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. வாழைத்தார் வரத்து குறைந்துள்ள நிலையில் விலையும் சரிந்ததால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் நேற்று, வெளி மாவட்ட வாழைத்தார்கள் வரவு இல்லாததால் உள்ளூர் வாழைத்தார்கள் வரத்து மட்டுமே இருந்தது. மேலும், விலையும் குறைவாக இருந்தது. வரும் நாட்களில் வரத்து அதிகரித்து, விலையில் மாற்றம் ஏற்படும்,' என்றனர்.
04-Sep-2025