உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணாரி அம்மன் கல்லுாரிக்கு நடுவர்களின் சிறப்பு விருது

பண்ணாரி அம்மன் கல்லுாரிக்கு நடுவர்களின் சிறப்பு விருது

கோவை: பெங்களூர், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டி நடந்து வருகிறது.நடப்பாண்டுக்கான, எல் அண்ட் 'டிடெக்ஜியம்' எட்டாவது பதிப்பு, பொறியல் மாணவர்கள், நிஜ உலக தொழில்துறை சிக்கல்களுக்கு தீர்வை வழங்கும் தளமாக இருந்தது. இதில், 35,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்கள் புதுமையான யோசனைகளைச் சமர்ப்பித்தனர்.பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியின், ஹேக்கத்தான் ஆய்வகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா, சிவராம், ரிதன்யா மற்றும் சமிதா ஆகியோர் இறுதிப்போட்டியில் தங்கள் புதுமையான திறன்களை வெளிப்படுத்தினர்.பாதுகாப்பான ஆன்லைன் தளங்களை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஏ.ஐ., அடிப்படையிலான உள்ளடக்க மதிப்பீட்டு தீர்வை, பண்ணாரி அம்மன் மாணவர்கள் வழங்கினர்.இது, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை தானாகவே கண்டறிந்து வடிகட்ட, இயந்திரகற்றல் மற்றும் இயற்கை மொழிசெயலாக்க தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறது.மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு, நடுவர்களின் சிறப்பு விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி