உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழில்நுட்ப போட்டியில் அசத்திய பண்ணாரி அம்மன்

தொழில்நுட்ப போட்டியில் அசத்திய பண்ணாரி அம்மன்

கோவை: கிண்டி, பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை விழா, 'குருக் ஷேத்ரா' நடந்தது. பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியை சேர்ந்த இரண்டு அணியினர் பங்கேற்றனர்.ரோபோ கால்பந்து போட்டியில், தானியங்கி ரோபோக்களை வடிவமைத்து மாணவர்கள் விளையாடச் செய்தனர். துல்லியமான இயக்கங்கள், திறமையான பந்து கட்டுப்பாடு, பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் தடைகளை மிகக் குறுகிய காலத்தில் கடந்து செல்லுதல் திறன் கொண்ட ரோபோக்கள் பரிசோதிக்கப்பட்டன.இதில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்கள் மோகன் பிரசாந்த், பரணிதரன், கீர்த்திவாசன் மற்றும் புகழேந்தி ஆகியோரின் படைப்பு,இரண்டாம் இடத்தை வென்றது.தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் போட்டிகளில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பகல்லுாரி மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ