உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று துவக்கம்

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று துவக்கம்

அன்னுார் : பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று துவங்குகிறது.சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று இரவு பூச்சாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து 31ம் தேதி வரை மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஏப். 1ம் தேதி இரவு கம்பம் நடுதலும், அதன் பிறகு தினமும் கம்பம் சுற்றி ஆடுதலும் நடைபெறுகிறது.வருகிற 7ம் தேதி இரவு குண்டம் தயார் செய்தலும், 8ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பல ஆயிரம் பக்தர்கள் குண்டம் இறங்குதலும் நடைபெறுகிறது.வரும் 9ம் தேதி புஷ்ப ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. வரும் 10ம் தேதி மஞ்சள் நீராட்டும், 11ம் தேதி தங்க ரதத்தில் உலாவும், 12ம் தேதி பவுர்ணமி திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.வரும் 14ம் தேதி மறு பூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !