உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளுக்கு வந்தாச்சு பேட்டரி வாகனங்கள்

ஊராட்சிகளுக்கு வந்தாச்சு பேட்டரி வாகனங்கள்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளது. ஊராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கின்றனர். அவர்களின் பணி சுமையை குறைக்கவும், வேலையை எளிமையாக்கவும், எலக்ட்ரிக் வாகனம் வழங்கப்பட உள்ளது.தற்போது, முதற்கட்டமாக, தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ், 20 பேட்டரி வாகனங்கள், தலா 2 லட்சத்து, 27 ஆயிரத்து, 147 ரூபாய் மதிப்பீட்டில், 12 ஊராட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஊராட்சிகளில் குப்பை சேகரித்து அகற்ற, பேட்டரி வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, தற்போது, 20 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு, இன்சூரன்ஸ், பதிவு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த பின், ஊராட்சிகளுக்கு வழங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ