உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிற்சாலைக்கு கரடி விசிட்; உயிர்தப்பிய தொழிலாளர்கள்

தொழிற்சாலைக்கு கரடி விசிட்; உயிர்தப்பிய தொழிலாளர்கள்

வால்பாறை; ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும் வன விலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள பாரளை டீ எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் புகுந்த கரடி, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை விரட்டியது. அப்போது கையில் வைத்திருந்த குடையை கொண்டு, கரடியை விரட்டினர். இதனால் தொழிலாளர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர். அதன் பின் அந்த கரடி தோட்ட அதிகாரியின் வீட்டு வாசலில் நீண்ட நேரம் முகாமிட்டது. இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி.,கேமராவில் பதிவாகியுள்ளது. தொழிலாளர்கள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக பாரளை எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் கூட தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும், தேயிலை தொழிற்சாலை வளாகத்திலும் கரடி வந்து செல்கிறது. இதனால் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் பாரளை எஸ்டேட் பகுதியில் நடமாடும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை