உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு - திருவனந்தபுரம் ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு - திருவனந்தபுரம் ரயில்

கோவை; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, போத்தனுார் வழியாக பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - திருவனந்தபுரம்(06523) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வரும், 11 முதல், செப்., 15ம் தேதி வரை திங்கள் கிழமைகளில், எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து இரவு 7:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:15 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு(06524) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 12 முதல் செப்., 16ம் தேதி வரை, திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 3:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சென்றடையும். சிறப்பு ரயிலில், 20 படுக்கை வசதி, ஏ.சி., இரண்டடுக்கு, 2, மூன்றடுக்கு, 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.சிறப்பு ரயில்கள் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கனுார், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம், வர்கலா சிவகிரி, ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை