உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பைரவர் ஜெயந்தி விழா

 நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பைரவர் ஜெயந்தி விழா

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே உள்ள அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், பைரவர் ஜெயந்தி விழா நடந்தது. காரமடை அடுத்த சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பத்தாம் ஆண்டு சொர்ண ஆகர்ஷன பைரவர் ஜெயந்தி விழா நடந்தது. காலை 10 மணிக்கு பைரவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலையில், 108 திரவிய மூல மந்திர ஹோமம், அஷ்ட பைரவ ஹோமம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மேல் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு மகா கலச அபிஷேகமும், சர்வ அபிஷேகமும், அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை