உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதுநிலை தேர்வுகள் 20ல் துவக்கம் பாரதியார் பல்கலை அறிவிப்பு

முதுநிலை தேர்வுகள் 20ல் துவக்கம் பாரதியார் பல்கலை அறிவிப்பு

கோவை: முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள், வரும் 20ம் தேதி துவங்க உள்ளதாக பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.கோவை பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில், 133 கல்லுாரிகள் உள்ளன. பல்கலையில், 36 துறைகளின் கீழ், 40க்கும் மேற்பட்ட முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், எம்.பி.ஏ., -- எம்.சி., படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பாடப்பிரிவுகளுக்கு இந்தாண்டுக்கான பருவத்தேர்வுகள் வரும், 20ம் தேதி துவங்கப்பட உள்ளதாக பல்கலை அறிவித்துள்ளது. இதற்கான பட்டியல் https://b-u.ac.inஎன்ற பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு தேதியில் ஏதாவது சிக்கல் இருப்பின் இன்றைய தினத்துக்குள், பல்கலை இமெயில் முகவரிக்கு தெரிவிக்க, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறை, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், கடந்த, 1982 - 83 முதல், 2006 - 07ம் கல்வியாண்டு வரை பயின்றி மாணவர்கள் தங்களது அரியர் பாடங்களை, 2007 - 08ம் பாடத்திட்டத்தின் கீழ் எழுத அனுமதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !