பாரதியார் பல்கலை தடகள போட்டி; தடம் பதிக்கும் வீரர், வீராங்கனைகள்
கோவை; பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டியில் வீரர், வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர்.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, 42வது தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. நேற்று, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த, 20க்கும் அதிகமான கல்லுாரிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.பெண்களுக்கான, 20 கி.மீ., நடை போட்டியில், சந்தியா, காவியா, சாலினி ஆகியோரும், ஆண்களுக்கான போட்டியில், பிரனேஷ், தனுஷ், சல்மான் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஆண்களுக்கான, 21 கி.மீ., அரை மாரத்தான் போட்டியில் நவீன் பிரபு, பாண்டி, கபிலன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தொடர்ந்து, போல்வால்ட், தடை தாண்டுதல், 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.