மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.ராஜன் கோப்பை திண்டுக்கல் அணி வெற்றி
30-Dec-2024
கோவை; பாதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான பி-மண்டல கிரிக்கெட் போட்டியில் கே.பி.ஆர்., கல்லுாரி அணி வெற்றி பெற்றது.பாரதியார் பல்கலை பி-மண்டல கிரிக்கெட் போட்டி பல்கலை மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியில், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 238 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கோவை அரசு கலைக் கல்லுாரி அணி, 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.பல்வேறு சுற்றுக்களை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியும், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பி.எஸ்.ஜி., அணியினர், 20 ஓவருக்கு, 7 விக்கெட்களை இழந்து, 158 ரன்கள் எடுத்தனர்.அடுத்து விளையாடிய கே.பி.ஆர்., வீரர்கள், 19.5 ஓவர்களில், 7 விக்கெட்டுக்கு, 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் சென்னையில் தெற்கு மண்டல பல்கலைகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கின்றனர்.
30-Dec-2024