உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய படிப்புகளை வழங்க பாரதியார் பல்கலை ஒப்பந்தம்

புதிய படிப்புகளை வழங்க பாரதியார் பல்கலை ஒப்பந்தம்

கோவை : பாரதியார் பல்கலை மற்றும் ஐ.என்.எஸ்., அக்ரானி இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடற்படை அதிகாரிகளுக்கான, டிப்ளமோ படிப்புகளை வழங்கும் விதமாக, பாரதியார் பல்கலை மற்றும் இந்திய கடற்படையின், ஐ.என்.எஸ்., அக்ரானி இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.கோவை ரெட்பீல்ட்ஸ் ஐ.என்.எஸ்., அக்ரானி கம்யூனிட்டி கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ஸ்ரீனிவாசன் மற்றும் ஐ.என்.எஸ்., அக்ரானி கமடோர் மன்மோகன் சிங் ஆகியோர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் வாயிலாக, கடற்படை அதிகாரிகளுக்கான டிப்ளமோ இன் லீடர்ஷிப் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கான டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் ஆகிய, படிப்புகளை வழங்க முடியும்.பல்கலையின் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் அஜீத்குமார் லால்மோகன் மற்றும் ஐ.என்.எஸ்., அக்ரானி மூத்த கல்வி அலுவலர் கமாண்டர் அமித்குமார் சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை